1.1 நிரந்தர வாசி ஆகுதல்

யூகேவின் நிரந்தர வாசி அல்லது குடிமகனாவதற்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு:

  • ஆங்கிலம் பேச மற்றும் படிக்க இயல வேண்டும்.
  • யூகேவின் வாழ்க்கை பற்றி நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

தற்சமயம் (ஜனவரி 2013 ல் இருந்து) இவை உங்கள்ளுக்கு இருக்கிறதா என்பதை இரண்டு வழியில் சோதிக்க இயலும்.

  • யூகேவில் வாழ்க்கை (லைப் இன் தி யூகே) தேர்வை எழுதுதல் மற்ற மொழி பேசுவோர்க்கான ஆங்கிலத் தேர்வு (ESOL) (இங்க்லீஷ் பார் ஸ்பீக்கர்ஸ் ஆப் அதர் லாங்குவேஜ்) ன் ஆரம்ப நிலை 3ன் அளவுக்கு ஆங்கில மொழி புரிதல் இருக்க வேண்டிய அளவுக்கு இதில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். எனவே தனியாக ஒரு ஆங்கில மொழித் தேர்வு தேவையில்லை. புள்ளிகள் முறையில் 1 மற்றும் 2ம் நிலைகளில் இருப்பவர் உட்பட, பணி விசாவில் இங்கு இருப்பவர்கள், யூகேவில் நிரந்தரவாசியாக கண்டிப்பாக லைப் இன் தி யூகே தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • குடியுரிமையோடு ஆங்கிலத்தில் ESOL வகுப்பில் தேற வேண்டும். உங்கள் ஆங்கிலத் தரம் ESOL ஆரம்ப நிலை 3க்குக் குறைவாக இருந்தால், இவ்வகுப்பில் நீங்கள் சேர வேண்டும். உங்கள் ஆங்கிலத்தை வளர்க்கவும் யூகேவில் வாழ்க்கையைப் பற்றி கற்கவும் இவ்வகுப்பு உதவும். வகுப்புக்காலத்தின் இறுதியில் ஒரு தேர்வை எழுத வேண்டும்.

இத்தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றபின், நிரந்தர வாசி அல்லது பிரிட்டிஷ் குடியுரிமைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் நிரப்ப வேண்டிய விண்ணப்பம் மற்றும் அளிக்க வேண்டிய ஆதாரம் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொருத்து இருக்கும். விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் விண்ணப்பத்தின் வகையைப் பொருத்து மாறும். அனைத்துப் படிவங்களும் கட்டணங்களில் பட்டியலும் யூகே எல்லை அமைப்பின் இணையதளமான www.ukba.homeoffice.gov.uk ல் காணப்படும்.

அக்டோபர் 2013 ல், தேவைகள் மாறிவிடும். அன்றிலிருந்து, நிரந்தரவாசம் அல்லது பிரிட்டிஷ் குடியுரிமைக்கு நீங்கள்:

  •  லைப் இன் தி யூகே தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும்.

AND மற்றும்

  • பொதுவான ஐரோப்பிய கோட்பாட்டின் B1 அளவுக்குரிய ஆங்கிலத்தில் பேசும் கவனிக்கும் திறனின் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஆதாரத்தை நீங்கள் அளிக்க வேண்டும். இது ESOL ஆரம்ப நிலை 3க்கு சமமானது. குடியுரிமை விண்ணப்பத்திற்கான தேவைகள் வருங்காலத்திலும் மாறக்கூடும். கூடுதல் தகவல்கள் யூகே எல்லை அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்படும். குடியேற்றம் அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் தற்போதைய தேவைகளை அறிய அந்த இணையதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

This study guide is also available in: arArabicbeBengalidrDarizh-hansChinese (Simplified)enEnglishguGujaratihiHindineNepalipshPashtoplPolishpaPunjabitrTurkishurUrdu