நீண்ட சிறப்பு வாய்ந்த வரலாற்றை உடைய நாகரிகமான வளமான சமுதாயமான பிரிட்டன் வாழ்வதற்கு அருமையான இடம். பிரிட்டிஷ் மக்கள் உலகின் அரசியல், விஞ்ஞானம், தொழில் மற்றும் கலாச்சார வளர்ச்சில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள் எங்கள் தேசத்தின் பல்வகைமை மற்றும் இயக்கவாதத்திற்கு பங்களிக்க வரும் புதிதாகக் குடியேறுபவர்களை நாங்கள் வரவேற்கும் எங்கள் பண்பில் பெருமிதம் கொள்கிறோம்.
யூகே வின் நிரந்தர குடிமகனாக குடியேறுவதன் மூலம், இதன் சட்டங்கள், கடமைகள் மற்றும் பாரம்பரியத்தை மதித்து நடக்க ஒப்புக் கொள்கிறீர்கள். யூகேவின் நிரந்தரவாசி அல்லது குடிமகனாக ஆவதற்கு விண்ணப்பிப்பது ஒரு முக்கிய முடிவும் கடமையும் ஆகும். சிறந்த குடிமக்கள் யூகேவின் சொத்து. சமுதாயத்திற்கு நல்ல வகையில் பங்களிக்க முனைவோரை நாங்கள் வரவேற்கிறோம்.
லைப் இன் தி யூகே தேர்வில் தேர்ச்சி பெறுவது நீங்கள் யூகேவில் நிரந்தர குடியேறுபவராக தயாராகிவிட்டீர்கள் என்பதைக் காட்டுவதில் ஒன்றாகும்.
இந்த சிறு புத்தகம் நீங்கள் தயாராவதற்கு உதவும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து உங்கள் பகுதி சமூகத்தில் முழுதாக அங்கம் வகிக்க இப்புத்தகம் உதவும். யூகேவின் கலாச்சாரம், சட்டம் மற்றும் வரலாற்றைப் பற்றி பரவலான பொது அறிவைப் பெறவும் இப்புத்தகம் உதவும்.
யூகேவில் வசிக்கும் அனைவரும் மதித்து ஆதரவளிக்க வேண்டிய அடிப்படை மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளில் அடிப்படையிலேயே பிரிட்டிஷ் சமுதாயம் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் குடிமக்கள் மற்றும் யூகேவின் நிரந்தரவாசிகளின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் சலுகைகளில் இந்த மதிப்பீடுகளைக் காணலாம் இந்த மதிப்பீடுகள் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்தவை சட்டம், வழக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளால் பாதுகாக்கப்படுபவை. பிரிட்டிஷ் சமுதாயத்தில் தீவிரவாததிற்கோ சகிப்புத்தன்மையின்மைக்கோ இடமில்லை.
பிரிட்டிஷ் வாழ்க்கையின் அடிப்படை கொள்கைகள்:
- மக்களாட்சி
- சட்டத்தை நிலைநிறுத்துவது
- தனிநபர் சுதந்திரம்
- மற்ற மதம் மற்றும் நம்பிக்கைகளைப் பின்பற்றுவோர் மீதான சகிப்புத்தன்மை
- சமூக வாழ்வில் பங்கேற்றல்
குடியேற்பு விழாவின் அங்கமாக புதிய குடிமக்கள் இந்த மதிப்பீடுகளை நிலைநாட்ட உறுதியளிக்கின்றனர். அவ்வுறுதிமொழி:
‘நான் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு (யுனைடட் கிங்டம்) உண்மையாக இருப்பேன். அதன் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பதிப்பேன். அதன் ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவேன். அதன் சட்டங்களை உண்மையாகப் பின்பற்றுவேன். பிரிட்டிஷ் குடிமகனாக எனது கடமைகள் மற்றும் பணிகளை செய்வேன்.’
அடிப்படை கொள்கைகளில் இருந்து வருவது கடமைகளும் சுதந்திரங்களும் ஆகும். அவை யூகேவில் வாழும் அனைவராலும் பின்பற்றப்படுபவை. அவற்றை இங்கு வசிக்கும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
யூகேவின் நிரந்தரவாசி அல்லது குடிமகனாக ஆகா விரும்பினால், நீங்கள்:
- சட்டத்தை மதித்துப் பின்பற்ற வேண்டும்.
- மற்றவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும், அவர்களுடைய சொந்த கருத்துரிமை உட்பட
- மற்றவர்களை நியாயமாக நடத்த வேண்டும்.
- உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
பதிலுக்கு யூகே உங்களுக்கு அளிப்பது:
- மத மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம்
- பேச்சுச் சுதந்திரம்
- அநியாயமான பாரபட்சத்தில் இருந்து சுதந்திரம்
- நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமை
- அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் பங்குவகிக்கும் உரிமை
This study guide is also available in: Arabic
Bengali
Dari
Chinese (Simplified)
English
Gujarati
Hindi
Nepali
Pashto
Polish
Punjabi
Turkish
Urdu